திருப்புவனத்தில் மிரண்ட யானையால் பரபரப்பு
திருப்புவனத்தில் மிரண்ட யானையால் பரபரப்பு
திருப்புவனத்தில் மிரண்ட யானையால் பரபரப்பு
ADDED : செப் 14, 2011 12:10 AM

திருப்புவனம் :யானைப்பாகனின் உதவியாளர் போதையில் இம்சித்ததால் திடீரென மதம் பிடித்தது போல், யானை ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.ராஜபாளையத்திலிருந்து 'வள்ளி' என்ற பெண் யானையை, ஏர்வாடியில் நடக்க உள்ள திருவிழாவிற்காக நடை பயணமாக பாகன் அப்பாஸ் அழைத்து சென்றார்.
உதவியாளர் அமுல் யானையை கடை , கடையாக அழைத்துச் சென்று 'பிச்சை' எடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மெயின்ரோட்டில் நேற்று மாலை பணம் வசூலித்த போது, போதையில் இருந்த அமுல் தவறாக யானையின் காலில் மிதித்து கட்டளையிட்டதால், திடீரென மதம் பிடித்தது போல், அருகே இருந்த சைக்கிளை எடுத்து வீசியது யானை. யானையின் ஆவேசத்தால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய அமுலை, இன்ஸ்பெக்டர் சுபகுமார் எச்சரித்து அனுப்பினர்.