/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அ.தி.மு.க., வேட்பாளர் வீடு மீது கல்வீச்சு: பைக்கிற்கு தீ வைப்புஅ.தி.மு.க., வேட்பாளர் வீடு மீது கல்வீச்சு: பைக்கிற்கு தீ வைப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் வீடு மீது கல்வீச்சு: பைக்கிற்கு தீ வைப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் வீடு மீது கல்வீச்சு: பைக்கிற்கு தீ வைப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் வீடு மீது கல்வீச்சு: பைக்கிற்கு தீ வைப்பு
ADDED : அக் 03, 2011 10:56 PM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர் ரமேஷ் ராஜா வீட்டின் மீது கல்வீசி, பைக்கிற்கு தீ வைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் நகராட்சி ஏழாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ,அ.தி.மு.க., சார்பில் பெரியகடை பஜாரை சேர்ந்த ரமேஷ் ராஜா, 38,போட்டியிடுகிறார். நேற்று அதிகாலை 3.15 மணிக்கு,இவரது வீட்டின் மீது கல்வீசி, ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது. ரமேஷ் ராஜா எழுந்து பார்த்தபோது,வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த , 'ஹன்க்' பைக் தீ பிடித்து எரிந்தது. அருகே இருந்தவர்கள் தீயை அணைத்தனர். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர் .


