Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/குழந்தைகளுக்கு நீதிக் கதைகள் கற்றுக்கொடுப்பதில்லை: ஐகோர்ட் நீதிபதி பேச்சு

குழந்தைகளுக்கு நீதிக் கதைகள் கற்றுக்கொடுப்பதில்லை: ஐகோர்ட் நீதிபதி பேச்சு

குழந்தைகளுக்கு நீதிக் கதைகள் கற்றுக்கொடுப்பதில்லை: ஐகோர்ட் நீதிபதி பேச்சு

குழந்தைகளுக்கு நீதிக் கதைகள் கற்றுக்கொடுப்பதில்லை: ஐகோர்ட் நீதிபதி பேச்சு

UPDATED : செப் 06, 2011 10:11 AMADDED : செப் 05, 2011 06:14 PM


Google News
Latest Tamil News

சென்னை: 'குழந்தைகளுக்கு பள்ளியிலும்,µ வீட்டிலும் நீதிக் கதைகளைக் கற்றுக் கொடுப்பதில்லை'' என்று, ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார்.

மாடம்பாக்கம்-செம்பாக்கம் நண்பர்கள் பேரவை, மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பேரவைச் செயலர் மோகன குமாரன் வரவேற்றார். விழாவில், ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது: வீட்டில் இருந்து நம்முடைய புரட்சி ஏற்படுகிறது. என் வீடு ஒழுக்கமாக இருக்கிறதா, நான் நல்லவனாக இருக்கிறேனா என நினைக்க வேண்டும். குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்டு நடக்க மாட்டார்கள்; நாம் செய்வதைப் பார்த்துத் தான் நடப்பார்கள். குழந்தைகளுக்குப் பள்ளியிலும், வீட்டிலும் நீதிக் கதைகளைக் கற்றுக் கொடுப்பதில்லை. நீதிக் கதைகளைக் கற்றால், எத்தனை மதிப்பெண்கள் போடுவார்கள் என்று கேட்கின்றனர். நல்ல நண்பர்கள் கிடைக்காத காரணத்தால் தான், குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இவ்வாறு, ராமசுப்பிரமணியன் பேசினார்.



தொடர்ந்து, பாலகங்கா எம்.பி., பத்திரிகையாளர் எம்.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் பேசினர். மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வழக்கறிஞர் பின்னலூர் விவேகானந்தன் அறிமுக உரையாற்றினார்; பேரவைத் தலைவர் பழனி நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us