ADDED : செப் 19, 2011 12:40 AM
திருவாரூர்: குடிபோதையில் ஆற்றில் விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
திருவாரூர் தாலுகா தொழுவனங்குடி கிராமம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கணேசன்
மகன் ரமேஷ் (28). கூலித்தொழிலாளி. குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர்
நேற்று முன்தினம் குடிபோதையில் இருந்தபோது, தனது வீடு அருகே உள்ள சுக்கான்
ஆற்றில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீஸார்
விசாரிக்கின்றனர்.