மதுரையில் 8 நாள் குழந்தைக்கு ஆபரேஷன்
மதுரையில் 8 நாள் குழந்தைக்கு ஆபரேஷன்
மதுரையில் 8 நாள் குழந்தைக்கு ஆபரேஷன்
ADDED : ஆக 18, 2011 12:27 PM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாளே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (25). இவரது மனைவி வனிதா (22). இவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 8 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தையின் மூக்கின் இரு பகுதியிலும் பின்புற துவாரத்தில் அடைப்பு இருந்ததால், மூச்சுவிட சிரமப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு மருத்துவமனை டாக்டர்கள் இன்று அறுவை சிகிச்சை செய்து அடைப்பை சரி செய்தனர். மருத்துவமனை வரலாற்றில் பிறந்து 8 நாளே ஆன குழந்தைக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.