தேர்தலில் போட்டியிட நாளை முதல் விண்ணப்பம்: அ.தி.மு.க., அறிவிப்பு
தேர்தலில் போட்டியிட நாளை முதல் விண்ணப்பம்: அ.தி.மு.க., அறிவிப்பு
தேர்தலில் போட்டியிட நாளை முதல் விண்ணப்பம்: அ.தி.மு.க., அறிவிப்பு
ADDED : செப் 01, 2011 12:01 AM

சென்னை : தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களின் விண்ணப்பங்கள், நாளை முதல், 8ம் தேதி வரை பெறப்படுகிறது.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் நடை பெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் உறுப்பினர்கள், அதற்கான விண்ணப்பங்களை, அந்தந்த மாவட்டங்களில் பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள், தலைமை அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
வரும் 2ம் தேதி(நாளை) முதல், 8ம் தேதி வரை பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், உறுப்பினர்களிடமிருந்து பெறப்படுகின்றன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.