Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை.,யில் ஸ்தோத்திரப்பண்டிகை கோலாகலம்

பாளை.,யில் ஸ்தோத்திரப்பண்டிகை கோலாகலம்

பாளை.,யில் ஸ்தோத்திரப்பண்டிகை கோலாகலம்

பாளை.,யில் ஸ்தோத்திரப்பண்டிகை கோலாகலம்

ADDED : ஜூலை 15, 2011 02:16 AM


Google News

திருநெல்வேலி:தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலம் சார்பில் பாளை., கதீட்ரல் ஆலயத்தில் நேற்று ஸ்தோத்திரப்பண்டிகை கோலாகலமாக நடந்தது.

தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலம் சார்பில் மாம்பழச்சங்கமும், 231வது வருடாந்திர ஸ்தோத்திரப் பண்டிகையும் கடந்த 12ம்தேதி அருட்பணியாளர்களின் ஆராதனையுடன் துவங்கியது.

மாலை 5 மணிக்கு மிலிட்டரி லைன் கிறிஸ்தவ ஆலயத்திலிருந்து பாளை., நூற்றாண்டு மண்டபம் வரை பேரணி நடந்தது. பேரணியை பிஷப் கிறிஸ்துதாஸ் துவக்கி வைத்தார். மாலை 6 மணிக்கு கொடியேற்றம், ஆயத்த ஆராதனை நடந்தது.



நேற்று முன்தினம்(13ம்தேதி) பாளை., நூற்றாண்டு மண்டபத்தில் திருவிருந்து ஆராதனையும், மதியம் 12மணிக்கு பண்டிகை ஆராதனையும் நடந்தது. இதனையடுத்து கிறிஸ்தவர்கள், ஏழைகளுக்கு அரிசி, பணம் மற்றும் பல்வேறு பொருட்களை காணிக்கையாக வழங்கினர்.231வது வருடாந்திர விழாவை முன்னிட்டு பாளை., கதீட்ரல் ஆலயத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு ஸ்தோத்திரப் பண்டிகையும், திருவிருந்து ஆராதனையும் நடந்தது. இதில் சபை குருக்கள் ஒரு நாள் வருமானத்தை காணிக்கையாக செலுத்தினர்.நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதியம் 12 மணிக்கு பொதுக் கூட்டம் நடந்தது. இதில் நெல்லை திரு மண்டல பிஷப் கிறிஸ்துதாஸ், குமரி திரு மண்டல பிஷப் தேவகடாட்சம், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பிஷப் ஜெபச்சந்திரன் ஆகியோர் ஆசிர்வாதம் வழங்கினர்.ஏற்பாடுகளை லே செயலாளர் தேவதாஸ், திருமண்டல பொருளாளர் செல்வின் ஜெயராஜ், கூட்டுனர் ஸ்டீபன், பாஸ்கர் கனகராஜ், குருத்துவ செயலாளர் வசந்தகுமார், உப தலைவர் பில்லி செய்திருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us