டவுசர் கொள்ளையரை கைது செய்த போலீஸார்
டவுசர் கொள்ளையரை கைது செய்த போலீஸார்
டவுசர் கொள்ளையரை கைது செய்த போலீஸார்
ADDED : ஜூலை 24, 2011 01:06 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி பகுதியில் நடந்த தொடர் கொள்ளை சம்மந்தமாக, நான்கு டவுசர் கொள்ளையர்களை தனிப்படை போலீஸார் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதியில், டவுசர் கொள்ளையர்கள் வீடுகளில் புகுந்து தொடர் கைவரிசை காட்டிய சம்பவத்தால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து, ஏ.எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையிலான போலீஸார் தொடர் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். அதன்பின், ஆத்தூர் டி.எஸ்.பி., மாணிக்கம் மேற்பார்வையில், தலைவாசல் இன்ஸ்பெக்டர் அன்பரசு, கெங்கவல்லி எஸ்.ஐ., அன்பரசன் ஆகியோர் தலைமையிலான, இரு தனிப்படை போலீஸார், டவுசர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் (35), முருகேசன் (30) உள்ளிட்ட நான்கு பேரை, தனிப்படை போலீஸார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


