/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு பஸ் வசதி: மாணவர்கள் கோரிக்கைஅரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு பஸ் வசதி: மாணவர்கள் கோரிக்கை
அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு பஸ் வசதி: மாணவர்கள் கோரிக்கை
அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு பஸ் வசதி: மாணவர்கள் கோரிக்கை
அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு பஸ் வசதி: மாணவர்கள் கோரிக்கை
ADDED : ஆக 08, 2011 02:53 AM
கரூர்: 'கரூர் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிக்கு தனியாக பஸ் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்' மாணவர்கள் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கரூரை அடுத்த காணியாளம்பட்டியில் கடந்தாண்டு முதல் அரசு தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது.
அதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 633 மாணவ, மாணவிகள் டித்து வருகின்றனர். பெரும்பாலனோர், கிராமப்புறங்களில் இருந்து வருகின்றனர். ஆனால், போதிய பஸ் வசதி இல்லாததால், குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. மேலும் காணியாளம்பட்டி வழியாக செல்லும் பஸ்களில் எங்களை ஏற்றி செல்வது இல்லை. எனவே காணியாளம்பட்டி வழியாக கல்லூரிகக்கு செல்ல புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


