/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/இன்னர்வீல் விழாவில் கோரிக்கை "டிவி' சீரியல் பார்ப்பதை பெண்கள் தவிர்க்கணும்இன்னர்வீல் விழாவில் கோரிக்கை "டிவி' சீரியல் பார்ப்பதை பெண்கள் தவிர்க்கணும்
இன்னர்வீல் விழாவில் கோரிக்கை "டிவி' சீரியல் பார்ப்பதை பெண்கள் தவிர்க்கணும்
இன்னர்வீல் விழாவில் கோரிக்கை "டிவி' சீரியல் பார்ப்பதை பெண்கள் தவிர்க்கணும்
இன்னர்வீல் விழாவில் கோரிக்கை "டிவி' சீரியல் பார்ப்பதை பெண்கள் தவிர்க்கணும்
ADDED : ஜூலை 12, 2011 12:03 AM
திருத்துறைப்பூண்டி: ''சட்டவிதிகளை மீறி ஒளிபரப்பப்படும் சீரியல்களை
பார்ப்பதை பெண்கள் தவிர்த்து, சமூக பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள
வேண்டும்,'' என்று இன்னர்வீல் மாவட்ட முன்னாள் ஆளுனர் கலையரசி பேசினார்.
திருத்துறைப்பூண்டி இன்னர்வீல் கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா,
தலைவர் தாராகேசரி தலைமையில் நேற்று நடந்தது. செயலாளர் டாக்டர் விமலாராணி
செயல் அறிக்கை யை வாசித்தார். புதிய தலைவராக மாலினி, செ யலாளராக ராஜகுமாரி,
பொருளாளராக புனிதா மற்றும் இயக்குனர்கள் பொறுப்பேற்றனர்.விழாவில்,
இன்னர்வீல் மாவட்ட முன்னாள் ஆளுனர் கலையரசி பேசியபோது, ''மனித சக்தியை,
காலத்தை, 'டிவி'க்களில் வரும் சீரியல்களை பார்த்து பெண்கள்
வீணடிக்கின்றனர். சட்டவிதிகளை மீறி ஒளிப்பரப்படும் சீரியல்களை பார்ப்பதை
பெண்கள் தவிர்த்து, சமூக பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படுங்கள்,'' என்றார்.
கடந்தாண்டு எஸ்.எஸ். எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்
பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. ரோட்டரி கிளப் தலைவர்
பாலசுப்ரமணியன், லயன்ஸ் கிளப் தலைவர் செல்வகணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.