/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கள்ளக்காதல் விபரீதம் விளாத்திகுளத்தில் 3 பேர் தற்கொலைகள்ளக்காதல் விபரீதம் விளாத்திகுளத்தில் 3 பேர் தற்கொலை
கள்ளக்காதல் விபரீதம் விளாத்திகுளத்தில் 3 பேர் தற்கொலை
கள்ளக்காதல் விபரீதம் விளாத்திகுளத்தில் 3 பேர் தற்கொலை
கள்ளக்காதல் விபரீதம் விளாத்திகுளத்தில் 3 பேர் தற்கொலை
ADDED : செப் 21, 2011 01:13 AM
விளாத்திகுளம்:விளாத்திகுளத்தில் கள்ளக்காதல் தொடர்பினால் தன் குழந்தை மற்றும் கள்ளக் காதலனுடன் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, விளாத்திகுளம் அருகேயுள்ள
தாப்பாத்தியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்(லேட்) மனைவி அய்யம்மாள்(30), தனது
மகள் அழகுலட்சுமி(11), மகன் பாலமுருகன்(6) ஆகியோருடன் விளாத்திகுளம்
காமராஜர் நகரில் வசித்து வந்தார். கணவரை இழந்த அய்யம்மாள் கொத்தனார்
வேலைக்கு செல்லும் போது விளாத்திகுளம் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த
முத்துமாடசாமி மகன் பொன்மாடசாமி(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பொன்மாடசாமியும் கொத்தனார் வேலை செய்பவர். இவருக்கும் திருமணமாகி மனைவி
மற்றும் இர ண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த மூன்று மாத கால மாகவே
பொன்மாடசாமி தன து வீட்டிற்கு செல்வதைவிட அய்யம்மாள் வீட்டிற்கே அதிகமாக
சென்று வந்துள்ளார். இதனை பொன்மாடசாமியின் மனைவி மற்றும் குடும்பத்தார்
கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு அய்யம்மாள் வீட்டுக்கு பொன்மாடசாமி சென்றுள்ளார்.
அங்கு பொன்மாடசாமி, அய்யம்மாள் இருவரும் விஷம் குடித்துவிட்டு அய்யம்மாள்
குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளனர். இதில் பொன்மாடசாமி(27),
அய்யம்மாள்(30), அய்யம்மாளின் மகள் அழகுலட்சுமி(11) இறந்து விட்டனர்.
அய்யம்மாளின் மகன் பாலமுருகன்(6) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பாலமுருகனுக்கு விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்கப்பட்டு
வருகிறது. இதுகுறித்து விளாத்திகுளம் டிஎஸ்பி.,சாகுல்அமீது, இன்ஸ்பெக்டர்
வரதராஜன் விசாரணை நடத்தி வருகின்றனர்.