/உள்ளூர் செய்திகள்/கரூர்/குளித்தலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் சாலைமறியல்குளித்தலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் சாலைமறியல்
குளித்தலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் சாலைமறியல்
குளித்தலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் சாலைமறியல்
குளித்தலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் சாலைமறியல்
ADDED : ஆக 11, 2011 02:43 AM
குளித்தலை: குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதனால் திருச்சி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குளித்தலை அருகே அய்யர்மலையில் அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. 27 பேராசிரியர்கள் பணியில் இருக்க வேண்டிய குளித்தலை அரசு கல்லூரியில் தற்போது ஏழு பேர் மட்டுமே பணியில் உள்ளனர். காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவ, மாணவிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மாணவ, மாணவிகள் நேற்று காலை 9.30 மணிக்கு கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்த குளித்தலை ஆர்.டி.ஓ., மாரிமுத்து, கல்லூரி முதல்வர் ராஜூ, டி.எஸ்.பி., இளங்கோ, தாசில்தார் நேரு ஆகியோர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ' கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசுக்கு பேராசிரியர்கள் பற்றாக்குறை குறித்து கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்' என அதிகாரிகள் தரப்பில் மாணவ, மாணவிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவிகள் அமைதியாக கலைந்து சென்றனர். கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் மாணவ,மாணவிகள் நடத்திய சாலை மறியலால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.