தேனிலவு ஸ்பெஷல் : பிகினியில் பெயர் எழுதிய கிம் கர்தாசியான்
தேனிலவு ஸ்பெஷல் : பிகினியில் பெயர் எழுதிய கிம் கர்தாசியான்
தேனிலவு ஸ்பெஷல் : பிகினியில் பெயர் எழுதிய கிம் கர்தாசியான்
ADDED : செப் 13, 2011 12:55 PM

மாடல் அழகி, டி.வி., ரியால்டி ஷோ தொகுப்பாளினி, நடிகை என பல்வேறு அவதாரங்களைக் கொண்ட கிம் கர்தாசியான் கடந்த மாதம் ( ஆகஸ்ட் 20ம் தேதி) என்.பி.ஏ., பாஸ்கட் பால் வீரர் கிரிஷ் ஹம்ப்ரிசை கரம் பிடித்தார்.
காதல் கைகூடிய சந்தோசத்தில், புதுமணத் தம்பதிகள் இருவரும் மினி ஹனிமூனுக்கு இத்தாலி சென்றுள்ளனர். இத்தாலியில் ஒரு லக்சுரி ஓட்டலில் தங்கியிருக்கும் கிம்-கிரிஷ் தம்பதிகள் புகைப்படக்காரர்கள் கண்களில் சிக்கி விட்டனர். அப்புறம் என்ன அந்தப்புரக் காட்சிகள் என்று கூட பாராமல் கிளிக்கி தள்ளிவிட்டனர் போட்டோகிராபர்கள்.
காமிராக் கண்ணில் சிக்கியது விநோத போட்டோ ஒன்று. அது தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கிம் கர்தாசியான், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கிம் கர்தாசியானின் பிகினி உடையில் எக்கச்சக்க போட்டோக்கள் இருக்கின்றனவே இதில் என்ன விசேஷம் என கேட்கும் ரசிகர்களுக்கு, விஷயம் என்னவென்றால் கிம், தனது பிகினியில் காதல் கணவர் கிரிஷ் ஹம்ப்ரிஸ் பெயரை சேர்த்து கிம் ஹம்ப்ரிஸ் என எம்ராய்டரி செய்துள்ளாராம். நம்ம ஊரில் கைகளில் காதலர், கணவர் பெயரை பச்சை குத்திக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. அயல்நாட்டில் இப்படி பிகினியில் பெயர் எழுதி பப்ளிசிட்டி தேடுகின்றனர். விந்தையான உலகம்.