"டாக்டர் பணியிடம் நிரப்பப்படும்' : உணவுத் துறை அமைச்சர் உறுதி
"டாக்டர் பணியிடம் நிரப்பப்படும்' : உணவுத் துறை அமைச்சர் உறுதி
"டாக்டர் பணியிடம் நிரப்பப்படும்' : உணவுத் துறை அமைச்சர் உறுதி
ADDED : செப் 11, 2011 11:54 PM

ஊட்டி: ''ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில், டாக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உணவுத் துறை அமைச்சர் தெரிவித்தார். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையை, உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன், நேற்று ஆய்வு செய்தார். சிகிச்சை பெறுவோரின் உடல் நிலை மற்றும் சிகிச்சை முறை குறித்து விசாரித்தார்; உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என, கண்காணிப்பாளர் பால்ராஜ், டாக்டர்கள் பொன் சிதம்பரம் மற்றும் பெருமாளிடம் வலியுறுத்தினார்.
நிருபர்களிடம் கூறுகையில், ''மலை மாவட்டமான நீலகிரியில் பணிபுரிய, பெரும்பாலான டாக்டர்கள் விரும்புவதில்லை; மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. ஊட்டி அரசு மருத்துவமனையில் 29 பணியிடங்களில், 16 டாக்டர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சிகிச்சை பெறுவோருக்கு தேவையான மருந்து, உணவுகள் தரமாக அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.