/உள்ளூர் செய்திகள்/கரூர்/அனைத்து துறையினரும் தயாராக இருக்கணும் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு : தஞ்சை கலெக்டர் "அட்வைஸ்'அனைத்து துறையினரும் தயாராக இருக்கணும் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு : தஞ்சை கலெக்டர் "அட்வைஸ்'
அனைத்து துறையினரும் தயாராக இருக்கணும் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு : தஞ்சை கலெக்டர் "அட்வைஸ்'
அனைத்து துறையினரும் தயாராக இருக்கணும் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு : தஞ்சை கலெக்டர் "அட்வைஸ்'
அனைத்து துறையினரும் தயாராக இருக்கணும் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு : தஞ்சை கலெக்டர் "அட்வைஸ்'
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை துவங்கப்படு ம். பேரிடர் மேலாண்மை அலுவலகத்தின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படம். அவசர ஃபோ ன் எண் 1077 தொடர்பு கொள்ளலாம். தாசில்தார்கள் நாள்தோறும் காலை 10 மணிக்குள் தினமும் விபர அறிக்கை கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். தீயணைப்புத்துறை சார்பில் அவசர மீட்டுப்பணி குறித்து மாதிரி செயல்விளக்கங்களை மக்கள், மாணவர்கள் அறியும் வகையில் செய்து காட்ட வேண்டும். பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதரவு அலுவலர்கள் முன்னேற்பாடு பணிகளான சமையல் கூடங்கள் வசதிகளுடன் கூடிய பள்ளிக்கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் திருமண மண்டபங்களின் விபரங்களை சேகரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழக துறையினர் உணவு பொருட்கள், மண்ணெண்ணெ ய், சாக்கு மூட்டைகளின் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
லாரிகள், டிராக்டர்கள் விபர பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையினர் பஞ்சாயத்துகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து வைக்க வேண்டும். சுகாதாரத்துறையினர் உயிர்காக்கும் மருந்துகள் பொதுமானதாக தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களை தயார் நிலையில் கொள்ள வேண்டும். மீன்வளத்துறையினர், படகுகளையும், நீச்சல் தெரிந்தவர்களின் பட்டியல்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
மின்சாரத்துறையினர் தேவையான சாதனங்களையும், கால்நடை பராமரிப்புத்துறையினர் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் போதிய இருப்பில் வைத்திருக்க வேண்டும். அவசர கால பணி மேற்கொள்ள மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவசர கால பணி மேற்கொள்ள மருத்துவக்குழுவினர் தயார்நிலையில் இருக்க வேண்டும். காவல், நெடுஞ்சாலை, விவசாயம், போக்குவரத்து, கல்வித்துறை, தேசிய பாதுகாப்புப்படை, ஊர்க்காவல் படை மற்றும் அனைத்துறை அலுவலர்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார். டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியார் (பொது) முகமதுஆரிப்சாகிப், ஆர்.டி.ஓ.,க்கள் தஞ்சாவூர் ராஜாமணி, பட்டுக்கோட்டை பாலகிருஷ்ணன், கும்பகோணம் வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.