/உள்ளூர் செய்திகள்/தேனி/அறிவிப்பு சிலைகளுக்கு வேதிபொருள் வர்ணம் கூடாதுவிநாயகர் சிலைகளைகரைக்கும் இடங்கள்அறிவிப்பு சிலைகளுக்கு வேதிபொருள் வர்ணம் கூடாதுவிநாயகர் சிலைகளைகரைக்கும் இடங்கள்
அறிவிப்பு சிலைகளுக்கு வேதிபொருள் வர்ணம் கூடாதுவிநாயகர் சிலைகளைகரைக்கும் இடங்கள்
அறிவிப்பு சிலைகளுக்கு வேதிபொருள் வர்ணம் கூடாதுவிநாயகர் சிலைகளைகரைக்கும் இடங்கள்
அறிவிப்பு சிலைகளுக்கு வேதிபொருள் வர்ணம் கூடாதுவிநாயகர் சிலைகளைகரைக்கும் இடங்கள்
ADDED : ஆக 19, 2011 11:02 PM
தேனி:மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகளை எங்கெங்கு கரைக்க வேண்டும் என
மாவட்ட நிர்வாகம் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த இடத்தை தவிர வேறு
இடத்தில் கரைக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தியின்
போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு இயற்கை வர்ணம் பூசி
பூஜிக்க வேண்டும். பெரியகுளத்தில் பாலசுப்பிரமணியன் கோயில் அருகே
வராகநதியில் கரைக்க வேண்டும். உத்தமபாளையத்தில் முல்லை பெரியாற்றில்
ஞானம்மன்கோயில் படித்துறையில் கரைக்கலாம்.கம்பத்தில் முல்லை பெரியாற்றில்
தொட்டாந்துறை, தேனியில் அரண்மனைப்புதூர் விலக்கில் முல்லை பெரியாற்றில்
கரைக்கலாம், ஆண்டிபட்டியில் வைகை அணை அருகே வைகை ஆற்றில் கரைக்கலாம்.
போடியில் கொட்டகுடி ஆற்றில் வேட்டவராயன் கோயில் அருகே கரைக்கலாம்.
சின்னமனூரிலும், மார்க்கையன் கோட்டையிலும் முல்லை பெரியாற்றில்
மார்க்கையன்கோட்டை ஆற்றுப்பாலம் அருகிலும், சிலைகளை கரைக்க
வேண்டும்.வேதிப்பொருளால் ஆன வர்ணங்கள் பூசக்டாது. விநாயகர் சதுர்த்தியை
சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பாரம்பரிய பழமைகள் பாதுகாக்கும் வகையில்
கொண்டாட வேண்டும் என கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


