ADDED : ஆக 29, 2011 10:20 PM
விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியில் கணிதத் துறை பேரவை துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு கணிதத் துறை தலைவர் செல்வி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் தேவி முன்னிலை வகித்தார். மாணவி அக்ஷயா வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியர் ஜோசப் கென்னடி கணிதப் பேரவையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரவை துணைத் தலைவர் விஷ்ணுப் பிரியா நன்றி கூறினார்.