/உள்ளூர் செய்திகள்/சேலம்/போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு: 2 பேர் கைதுபோலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது
போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது
போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது
போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது
சேலம்: சேலத்தில், போலி ஆவணம் தயாரித்து, நிலத்தை அபகரித்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், 2009ம் ஆண்டு வெங்கடேஷன் புகார் செய்தார். அப்போது, போலீஸார் அலட்சியம் காட்டியதால், அப்போதைய ஆர்.டி.ஓ., குழந்தைவேலுவிடம் புகார் செய்தார். அதன் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், போலிப்பத்திரம் தயார் செய்து, நிலத்தை அபகரிக்க மோகனசுந்தரம் குடும்பத்தினர் முயற்சிப்பது தெரியவந்தது. அவர், அந்த பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, வெங்கடேஷுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் வந்து கொண்டிருந்தது. தற்போது, போலீஸாரிடம் வெங்கடேஷம் நில அபகரிப்பு தொடர்பாக புகார் செய்தார். அதனடிப்படையில், நில அபகரிப்பு மீட்புக்குழு இன்ஸ்பெக்டர் மனோகரன்(பொறுப்பு) விசாரணை மேற்கொண்டு, மோகனசுந்தரம், ரவிச்சந்திரன் இருவரையும் கைது செய்தார். அவர்களது தம்பி சீனிவாசன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.


