நெய்வேலி : மா.கம்யூ., மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பட்டம் நடந்தது.
மா.கம்யூ., நகர செயலர் திருஅரசு தலைமை தாங்கினார். என்.எல்.சி., - சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க நிர்வாகிகள் வேல்முருகன், குப்புசாமி, முத்துவேல், சங்கிலிபாண்டியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொருளாளர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் சென்ற தெற்கு வாசலை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கார்த்திகேயன், ஜெயராமன், மணி, அன்பழகன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


