/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மகன் கொலைக்கு பழிக்கு பழியாக இளம்பெண் எரித்துக் கொலை : ஓராண்டுக்குப் பின் இருவர் கைதுமகன் கொலைக்கு பழிக்கு பழியாக இளம்பெண் எரித்துக் கொலை : ஓராண்டுக்குப் பின் இருவர் கைது
மகன் கொலைக்கு பழிக்கு பழியாக இளம்பெண் எரித்துக் கொலை : ஓராண்டுக்குப் பின் இருவர் கைது
மகன் கொலைக்கு பழிக்கு பழியாக இளம்பெண் எரித்துக் கொலை : ஓராண்டுக்குப் பின் இருவர் கைது
மகன் கொலைக்கு பழிக்கு பழியாக இளம்பெண் எரித்துக் கொலை : ஓராண்டுக்குப் பின் இருவர் கைது
ADDED : ஜூலை 14, 2011 09:10 PM
பரமக்குடி : பரமக்குடி அருகே மகன் கொலைக்கு பழிக்கு பழியாக இளம்பெண்ணை கொலை செய்தவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
பரமக்குடி அருகே விக்கிரவலசையில் சச்சா இருளாண்டியின் குடிசையில் கடந்தாண்டு ஜூன் 29ல், எரிந்த நிலையில் பெண் பிணம் கிடந்தது. அபிராமம் போலீசார் விசாரித்து வந்தனர். இறந்து கிடந்தது அதே பகுதியை சேர்ந்த சச்சா இருளாண்டியின் மகள் சாந்தாகுமாரி(22) என தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் போலீசாரின் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சேதுராஜா மகன் ராமரை, கச்சா இருளாண்டி மகன் உத்தரக்குமார் கொலை செய்தார். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்தது. சேதுராஜா, கோட்டாஸ் என்ற இருளாண்டி, காக்கா என்ற இருளாண்டி, மாரி, சண்முகவேல், சேதுராமு மற்றும் பூமிநாதன் ஆகியோர், ஜூன் 29ம் தேதி மதியம் 12 மணிக்கு கண்மாயில் குளிக்கச் சென்ற சச்சா இருளாண்டியின் மகள் சாந்தகுமாரி()யை வயல்காட்டிற்குள் தூக்கி சென்றனர். அங்கு அவரது கழுத்தை நெறித்துக் கொன்றனர். பின்னர் அவரது உடலை சச்சா இருளாண்டி வீட்டிற்குள் போட்டு தீ வைத்து எரித்தனர் என தெரியவந்தது. இதையடுத்து சேதுராஜா மற்றும் கோட்டாஸ் என்ற இருளாண்டியை போலீசார் கைது செய்து ரிமாண்டில் அடைத்தனர். மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.