/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரத்த வங்கிக்கு உபகரணங்கள் வந்தாச்சுரத்த வங்கிக்கு உபகரணங்கள் வந்தாச்சு
ரத்த வங்கிக்கு உபகரணங்கள் வந்தாச்சு
ரத்த வங்கிக்கு உபகரணங்கள் வந்தாச்சு
ரத்த வங்கிக்கு உபகரணங்கள் வந்தாச்சு
ADDED : ஆக 01, 2011 10:51 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் தட்டுப்பாட்டில் இருந்த ரத்த நோய்களை கண்டறியும் 'கிட்' (நோய் சோதிப்பு உபகரணங்கள்) எய்ட்ஸ் நோய் கட்டுபாடு வாரியத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் பெறப்பட்ட பின் ரத்தத்தில் எய்ட்ஸ் நோய், மலேரியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் உள்ளதா என்பதை கண்டறிய ரத்த வங்கியில் 'கிட்' உள்ளது.
இதில் ரத்த நோய்களை கண்டறிய மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும்.ரத்த தான முகாம்கள் நடக்கும் போது இதன் தேவை அதிகரிக்கும். அப்போது எய்ட்ஸ் கட்டுபாடு வாரியத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். ஆனால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக இந்த 'கிட்' இல்லாமல் இருந்தது.எய்ட்ஸ் கட்டுபாடு வாரியத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தும் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் 20 'கிட்கள்' வழங்கப்பட்டுள்ளன. மேலும் 30 'கிட்கள்' கேட்கப்பட்டுள்ளன, என்றனர்.