/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/விக்கிரமசிங்கபுரத்தில் குழந்தையுடன் ஆசிரியை மாயம்விக்கிரமசிங்கபுரத்தில் குழந்தையுடன் ஆசிரியை மாயம்
விக்கிரமசிங்கபுரத்தில் குழந்தையுடன் ஆசிரியை மாயம்
விக்கிரமசிங்கபுரத்தில் குழந்தையுடன் ஆசிரியை மாயம்
விக்கிரமசிங்கபுரத்தில் குழந்தையுடன் ஆசிரியை மாயம்
ADDED : செப் 11, 2011 12:43 AM
விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரத்தில் குழந்தையுடன் காணாமல் போன ஆசிரியை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம் கர்ணன் தெருவை சேர்ந்தவர் ஆளவந்தான் மனைவி கனிமொழி (30). இவர்களுக்கு அஜய் (4), காயத்திரி (8) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். கனிமொழி விக்கிரமசிங்கபுரம் அருகே செட்டிமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ஆளவந்தான் குஜராத்தில் சமையல் தொழில் செய்து வருகிறார். கனிமொழி தான் வேலை பார்க்கும் பள்ளியில் தனது இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி கனிமொழி தனது மகன் அஜய் உடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று முன்தினம் இச்சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.