/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/போப் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்க விழாபோப் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்க விழா
போப் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்க விழா
போப் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்க விழா
போப் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்க விழா
ADDED : செப் 17, 2011 02:15 AM
சாயர்புரம் : சாயர்புரம் போப் இன்ஜினியரிங் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் மாணவர் மன்றம் வைரஸ் 11 துவக்க விழா நடந்தது.
விழாவில் துறைத் தலைவர் பேராசிரியர் ஜஸ்பர்லின் வரவேற்றார். பேராசிரியர் கிறிஸ்டி பிரபுசிங் முன்னிலை வகித்தார். கோயம்புத்தூர் பீட்டா டெக்னாலாஜி இந்தியா பிரைவேட் லிமிடெட், நெட்வொர்க் இன்ஜினியர் அருண் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாணவர் மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். கல்லூரி முதல்வர் ஜெபராஜ் கலந்து கொண்டு மாணவர் மன்ற கூடுகையின் அவசியம் பற்றி பேசினார். தொடர்ந்து விழாவில் கடந்த பல்கலைக்கழக தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பேப்பர் பிரசன்டேஷன், சாப்ட்வேர் டிபக்கிங், குரூப் டிஸ்கஷன், போட்டிகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது. மாணவர் மன்ற செயலாளர் ராபின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜெபராஜ், துறைத் தலைவர் பேராசிரியர் ஜஸ்பர்லின், விழா அமைப்பாளர் பேராசிரியர் டயாலா மற்றும் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.