/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திருக்கோவிலூரில் பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சிதிருக்கோவிலூரில் பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி
திருக்கோவிலூரில் பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி
திருக்கோவிலூரில் பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி
திருக்கோவிலூரில் பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி
ADDED : ஜூலை 15, 2011 01:00 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கோவிலூர் சந்தப்பேட்டை தெற்கு தெருவில் வசிப்பவர் ஆபிஸ் உசேன் மனைவி ஷபினா (37). நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு முகமது சாகிப் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். காலையில் வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த இரண்டு சவரன் நகைகள், 2500 ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. பக்கத்து வீடான உசேன் மனைவி ஜெய்தூன் (27). வீட்டை பூட்டிவிட்டு, பள்ளிவாசல் வீதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். காலையில் வந்து பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டிருந்தது. பொருட்கள் ஏதும் திருடப்படவில்லை. அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்திருந்த நிலையில் நேற்று பகல் 12 மணி அளவில் சந்தப்பேட்டை கபிலபுரத்தில் உள்ள வாசுதேவன் வி.ஏ.ஓ., வீட்டின் பின்பக்க கதவை இரண்டு மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். வீட்டில் இருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டதையடுத்து மர்ம நபர்கள் தப்பி ஓடினர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் சந்தப்பேட்டை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


