/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/முகாசிபிடாரியூர் பஞ்., தலைவருக்கு சரண்யா மனுமுகாசிபிடாரியூர் பஞ்., தலைவருக்கு சரண்யா மனு
முகாசிபிடாரியூர் பஞ்., தலைவருக்கு சரண்யா மனு
முகாசிபிடாரியூர் பஞ்., தலைவருக்கு சரண்யா மனு
முகாசிபிடாரியூர் பஞ்., தலைவருக்கு சரண்யா மனு
ADDED : செப் 28, 2011 12:49 AM
சென்னிமலை: சென்னிமலை, முகாசிபிடாரியூர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு,
சரண்யா ஆறுமுகம் வேட்புமனு தாக்கல் செய்தார்.வேட்பாளர் சரண்யா கூறுகையில்,
''எனது கணவர் ஆறுமுகம், ஐந்து ஆண்டுகளாக யூனியன் கவுன்சிலராக இருந்து,
இப்பகுதிக்கு நல்ல பல திட்டங்களை செய்துள்ளார்.
எனது சொந்த ஊரும், எனது
கணவர் ஊரும் இதுதான். இதே பஞ்சாயத்தில் பல ஆண்டுகளாக வசிக்கிறோம்.
உறவினர்களும், நண்பர்களும் மிக அதிகம்.கடந்த 25 நாட்களாக பஞ்சாயத்து
பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும், பல முறை சந்தித்து, ஆதரவு
திரட்டிய பின், அனைவரின் ஒத்துழைப்பையும் கேட்ட பின்தான் களம் காணுகிறேன்.
அதனால், வெற்றியை கட்டாயம் மக்கள் தேடித்தருவர். வெற்றி பெற்றால், மிக
குறைந்த கட்டணத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என
அறிவித்துள்ளேன்; இது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,''
என்றார் சரண்யா.