/உள்ளூர் செய்திகள்/தேனி/ஸ்டேஷனை முற்றுகையிட வந்த மக்களுடன் போலீசார் சமரசம்ஸ்டேஷனை முற்றுகையிட வந்த மக்களுடன் போலீசார் சமரசம்
ஸ்டேஷனை முற்றுகையிட வந்த மக்களுடன் போலீசார் சமரசம்
ஸ்டேஷனை முற்றுகையிட வந்த மக்களுடன் போலீசார் சமரசம்
ஸ்டேஷனை முற்றுகையிட வந்த மக்களுடன் போலீசார் சமரசம்
ADDED : செப் 24, 2011 10:10 PM
தேனி : விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை விடுவிக்க கோரி ஸ்டேஷனை முற்றுகையிட வந்த மக்களுடன் போலீசார் சமரச பேச்சு நடத்தினர்.
தேனி அருகே வீரபாண்டியில் இருந்து கொடுவிலார்பட்டிக்கு சென்ற டவுன் பஸ் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் பஸ் கண்ணாடி சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து வீரபாண்டியை சேர்ந்த நான்கு பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். உடனே பொதுமக்கள், 'கல் எறிந்தவர்கள் தப்பி விட்டனர், அப்பாவிகளை பிடித்துள்ளீர்கள், அவர்களை விடுவிக்க வேண்டும்' எனக்கூறி ஸ்டேஷனை முற்றுகையிட வந்தனர். போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி விசாரணைக்கு அழைத்து வந்த நான்கு பேரையும் விடுவித்தனர். பொதுமக் கள் பஸ் மீது கல்வீசியவர்களை பிடித்து போலீசில் ஒப்படைப்பதாக உறுதி அளித்தனர்


