/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/325 பெண்களுக்கு தலா 4 கிராம் தாலிக்கு தங்கம்325 பெண்களுக்கு தலா 4 கிராம் தாலிக்கு தங்கம்
325 பெண்களுக்கு தலா 4 கிராம் தாலிக்கு தங்கம்
325 பெண்களுக்கு தலா 4 கிராம் தாலிக்கு தங்கம்
325 பெண்களுக்கு தலா 4 கிராம் தாலிக்கு தங்கம்
ADDED : செப் 19, 2011 01:17 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பெண்களின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்,
திருமண நிதியுதவி வழங்கும் திட்டம் துவக்க விழா நேற்று நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், மொடக்குறிச்சி பஞ்சாயத்து யூனியனை
சேர்ந்த 45 பெண்கள், கொடுமுடி யூனியனை சேர்ந்த 15 பெண்களின் தாலிக்கு தலா
நான்கு கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை, கலெக்டர் காமராஜ்,
மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., கிட்டுசாமி ஆகியோர் வழங்கினர்.எம்.எல்.ஏ.,
கிட்டுசாமி பேசுகையில், ''நேற்று (முன்தினம்) மதியம்தான் இத்திட்டத்தை
துவக்க உத்தரவு வந்தது. ஈரோடு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் விரைந்து
செயல்பட்டு, மறுநாளே திட்டத்தை துவக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.ஸி., படித்த ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்களுக்கு நான்கு
கிராம் தங்கம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, பட்டதாரி
இளம்பெண்ணுக்கு நான்கு கிராம் தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி
வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள் கல்வியறிவு பெற்று, எல்லா நிலைகளிலும் முன்னேறி, அனைத்து
துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டுமென இத்திட்டத்தை முதல்வர்
துவக்கியுள்ளார்,'' என்றார்.மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு நன்றி
கூறினார்.
தொடர்ந்து, பவானி யூனியனில் 32 பெண்கள், பெருந்துறை 21,
கோபிசெட்டிபாளையம் 36, டி.என்.பாளையம் 20, நம்பியூர் 15, சத்தி 26,
பவானிசாகர் 25, அந்தியூர் 15, அம்மாபேட்டை 25, தாளவாடி யூனியனில் 19
பெண்களுக்கு நேரில் சென்று அதிகாரிகள் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண
நிதியை வழங்கினர்.ஈரோடு யூனியனில் 22, சென்னிமலையில் 19 பெண்களுக்கு
மட்டும் தங்கம் மற்றும் நிதியுதவி இன்று வழங்கப்படுகிறது. மாவட்டத்தில்
மொத்தம் 325 பயனாளிகளுக்கு, 83.5 லட்சம் ரூபாயில் நிதியுதவி மற்றும் 33
லட்சத்து 26 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பில் தங்கம் உள்பட ஒரு கோடியே 16
லட்சத்து 76 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பிலான நல உதவி வழங்கப்படுகிறது.பெண்
கண்ணீர்ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்த விழாவில்
பங்கேற்குமாறு, பயனாளிகளிடம் முதல் நாளே தகவல் தெரிவிக்கப்பட்டது.
குமாரபாளையம் மேகலா என்ற பெண் தாமதமாக வந்ததால், அவருக்கு தங்கம்
வழங்கப்படவில்லை.
சமூக நல அலுவலர் அன்பு, 'நீ, தாமதமாக வந்ததால், ரிசர்வ் லிஸ்டில் இருந்த
மற்றொரு பெண்ணுக்கு தங்கம் கொடுத்துவிட்டோம். அடுத்த முறை
பார்த்துக்கொள்ளலாம்' என, அந்தப்பெண்ணிடம் கூறினார். இதைக் கேட்டு அந்தப்
பெண் வெகு நேரம் கதறி அழுதார்.தேர்வுபெற்ற பயனாளி விழாவுக்கு வராவிட்டால்,
அவருக்கான நல உதவியை, அலுவலகத்தில் வைத்து கொடுப்பதுதான் வழக்கம். தாமதமாக
வந்ததற்காக, பயனாளியையே மாற்றியது சரியா?