/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மனைப்பட்டா வழங்கும் பணிகளில் தீவிரம் விடுமுறை நாளிலும் அலுவலர்கள் "சுறுசுறு'மனைப்பட்டா வழங்கும் பணிகளில் தீவிரம் விடுமுறை நாளிலும் அலுவலர்கள் "சுறுசுறு'
மனைப்பட்டா வழங்கும் பணிகளில் தீவிரம் விடுமுறை நாளிலும் அலுவலர்கள் "சுறுசுறு'
மனைப்பட்டா வழங்கும் பணிகளில் தீவிரம் விடுமுறை நாளிலும் அலுவலர்கள் "சுறுசுறு'
மனைப்பட்டா வழங்கும் பணிகளில் தீவிரம் விடுமுறை நாளிலும் அலுவலர்கள் "சுறுசுறு'
ADDED : செப் 01, 2011 01:59 AM
திருப்பூர் : வீட்டு மனைப்பட்டா வழங்கும் பணிக்காக விடுமுறை நாளிலும் நேற்று அலுவலர்கள் பணி செய்தனர்.மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் குறை கேட்பு நாள், மனு நீதி நாள் முகாம்களில் வீட்டு மனைப்பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
இதில் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட அளவில் திருப்பூர் மற்றும் காங்கயம் தாலுகாவில் மட்டுமே ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தாசில்தார் பணியிடம் உள்ளது. இதில் இரண்டு பணியிடங்களும் காலியாக இருந்தன. இப்பிரிவில் அலுவலர் பற்றாக்குறை காரணமாக வீட்டு மனைப்பட்டா வழங்கும் பணி நீண்டகாலமாக தாமதமாகி வந்தது.கலெக்டரின் கவனத்துக்கு இப்பிரச்னை சென்றதையடுத்து காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருந்த பாலசுப்ரமணியம் திருப்பூர் தாலுகா ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டார். காங்கயம் தனி தாசில்தாராகவும் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. வீட்டு மனைப்பட்டா வழங்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.உடுமலை, மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் தாலுகா பகுதியைச் சேர்ந்த ஆதி திராவிடர் இனம் சார்ந்தவர்களுக்கு வீட்டு மனைப்பட்டாவுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் கண்ணமநாயக்கனூர், மைவாடி, பாப்பான்குளம், மணக்கடவு மற்றும் தளவாய்ப்பட்டணம் ஆகிய பகுதிகளில் விலைக்கு வாங்கப்பட்ட நிலங்களில், வீட்டு மனையிடங்களாக அளவீடு செய்து மாற்றப்பட்டன. அவ்வகையில் இந்நிலம் தலா 2 சென்ட் வீதம் பிரிக்கப்பட்டு, 300 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க பணி தீவிரமடைந்துள்ளது.நாளை தாராபுரத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் ராமலிங்கமும், உடுமலையில் ஊரக தொழில் துறை அமைச்சர் சண்முகவேலுவும் பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்க உள்ளனர். பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் ஏற்பாட்டில், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் செல்வராஜ் தலைமையில் அலுவலர்கள் நேற்று அரசு விடுமுறை நாளிலும் தீவிரமாக பணி மேற்கொண்டனர்.