/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஊழலுக்கு எதிரான கோவையில் அடுத்து என்ன? 5வது தூண் அமைப்பு கூட்டத்தில் முடிவுஊழலுக்கு எதிரான கோவையில் அடுத்து என்ன? 5வது தூண் அமைப்பு கூட்டத்தில் முடிவு
ஊழலுக்கு எதிரான கோவையில் அடுத்து என்ன? 5வது தூண் அமைப்பு கூட்டத்தில் முடிவு
ஊழலுக்கு எதிரான கோவையில் அடுத்து என்ன? 5வது தூண் அமைப்பு கூட்டத்தில் முடிவு
ஊழலுக்கு எதிரான கோவையில் அடுத்து என்ன? 5வது தூண் அமைப்பு கூட்டத்தில் முடிவு
ADDED : ஆக 28, 2011 12:34 AM
கோவை : தேசம் முழுவதும் லஞ்ச ஊழலுக்கு எதிராக போராடிய மற்றும் போராடி வரும் அனைவரையும் கவுரவிக்கும் பாராட்டு கூட்டம் 5வது தூண் அமைப்பு சார்பில் கொடிசியா வளாகத்தில் இன்று நடக்கிறது.ஐந்தாவது தூண் அமைப்பும் கடந்த 19ம் தேதி முதல் பிரசிடென்ட் ஹாலில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி, ஊழலுக்கு எதிரான அணியை திரட்டி வருகிறது.
அமைப்பின் தலைவர் விஜய் ஆனந்த், கோவை மண்டல இயக்குனர் ராஜ்குமார், உறுப்பினர்கள் கேஷவன், பிரகாஷ் ஆகியோர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று மாலை 5.00 முதல் 7.30 மணி வரை நடக்கும் கூட்டத்தில், அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்தும், லஞ்ச ஊழலுக்கு எதிராக போராடி வரும் அனைவரையும் கவுரவிக்கும் விதமாகவும், ஊழலுக்கு எதிரான கோவையின் அடுத்த நிலை குறித்து சிறப்புரைகள் இடம்பெறவுள்ளன.கோவை மண்டல இயக்குனர் ராஜ்குமார் கூறுகையில்,''அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் முடியும் வரை எங்களின் உண்ணா நோன்பு தொடரும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில், தினமும் மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒரு சில மணி நேரமாவது தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்று நடக்கும் கூட்டத்தில், தகவல் அறியும் உரிமை சட்டம், ஜீரோ ரூபாய் நோட்டின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் தெரிவிக்கப்பட உள்ளன. ஊழலுக்கு எதிராக போராடி வரும் கோவையின் அடுத்த நிலை என்ன என்பது குறித்து பேசப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும், ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் திரளாக பங்கேற்க வேண்டும்,'' என்றார்


