/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மகளிர் சுகாதார வளாகங்கள் இல்லாத இளையான்குடிமகளிர் சுகாதார வளாகங்கள் இல்லாத இளையான்குடி
மகளிர் சுகாதார வளாகங்கள் இல்லாத இளையான்குடி
மகளிர் சுகாதார வளாகங்கள் இல்லாத இளையான்குடி
மகளிர் சுகாதார வளாகங்கள் இல்லாத இளையான்குடி
ADDED : ஆக 24, 2011 12:16 AM
இளையான்குடி:இளையான்குடியில் நவீன கழிப்பறை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள்
பலர் அவதிப்படுகின்றனர்.இளையான்குடியில் 600 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இளையான்குடியை சுற்றி கிராமங்களே அதிகம் உள்ளதால் கிராம மக்கள் தங்களுக்கு
வேண்டிய பொருட்களை வாங்க இங்கு வந்து செல்கின்றனர்.
பேரூராட்சி சார்பில்
பஸ் ஸ்டாண்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஒரு சுகாதார வளாகம்
மட்டுமே உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால் அதுவும் பயன்படுத்த முடியாத
நிலையில் உள்ளது. கடை வீதி , சாலையூர் பகுதிகளில் நவீன கழிப்பிட வளாகங்கள்
இல்லாததால் கிராம மக்களும் வியாபாரிகளும் குறிப்பாக பெண்கள் மிகவும்
அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் அருகில் உள்ள ரகுமானியா தொடக்கப்பள்ளியின்
சுவர் ஓரங்களில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அருகில் உள்ள மதன வேணுகோபால் பெருமாள்
கோயில் சுவர் ஓரங்களிலும் சிறுநீர் கழிப்பதால் கோயிலுக்கு வருபவர்கள்
முகம் சுளிக்கும் அவல நிலை உள்ளது.