Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரயில்களில் அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டியவர்கள் கைது

ரயில்களில் அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டியவர்கள் கைது

ரயில்களில் அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டியவர்கள் கைது

ரயில்களில் அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டியவர்கள் கைது

ADDED : ஆக 23, 2011 11:45 PM


Google News
சென்னை:ரயில்களில் விளம்பர நோட்டீஸ் ஒட்டியவர்கள் மீது, ரயில்வே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, தாம்பரம் வழியாக தினசரி, ஏராளமான புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் மின்சார ரயில் பெட்டிகளில், ஏராளமான வேலை வாய்ப்பு குறித்த விளம்பர நோட்டீஸ்கள் ஒட்டப்படுகின்றன.சில கம்பெனிகள் முகம் சுளிக்க வைக்கும் விளம்பரங்களையும் ஒட்டுகின்றன.

இதன் காரணமாக, ரயில் பெட்டிகள் அனைத்தும் அசுத்தமடைவதுடன், பயணிகளையும் முகம் சுளிக்க வைக்கிறது. பெரும்பாலான விளம்பரங்கள் போலியாகவும், ஏமாற்றி பணம் கறக்கும் விளம்பரங்களாகவும் இருப்பதால், பலரும் பணத்தை இழந்து பரிதவிக்கின்றனர்.இதையடுத்து, புறநகர் மின்சார ரயில்களில் விளம்பரம் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில், ரயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி தலைமையில் தனிப்படையினர், இம்மாதம் முதல் தேதியில் இருந்து, ரயில்களில் விளம்பர நோட்டீஸ் ஒட்டியதாக 20 பேர் வரை பிடித்து, தலா 1,000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர். மேற்கொண்டு விளம்பரங்கள் ஒட்டக் கூடாது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

என்.சரவணன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us