பாரப்பட்டி சுரேஷ்குமார் ஜாமின் மனுஆகஸ்ட் 24ம் தேதி விசாரணை
பாரப்பட்டி சுரேஷ்குமார் ஜாமின் மனுஆகஸ்ட் 24ம் தேதி விசாரணை
பாரப்பட்டி சுரேஷ்குமார் ஜாமின் மனுஆகஸ்ட் 24ம் தேதி விசாரணை
ADDED : ஆக 23, 2011 04:39 AM
சேலம்:பாரப்பட்டி சுரேஷ்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.சேலம் அங்கம்மாள் காலனி வழக்கில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது தம்பி மகன் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்ளிட்ட 13 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் பெற்றுள்ளார்.இதில் பாரப்பட்டி சுரேஷ்குமாரும், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் பெற்று, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில், கடந்த வாரம் சரணடைந்தார். மூன்று நாள் விசாரணைக்கு பின், ஆகஸ்ட் 20ம் தேதி மாலை, நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவ்வழக்கில், நிபந்தனை ஜாமினில் வெளிவந்த பாரப்பட்டி சுரேஷ்குமாரை, தாசநாயக்கன்பட்டி பாலமோகன்ராஜ் கொடுத்த நில அபகரிப்பு புகார் வழக்கில், போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.இவ்வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என, சேலம் ஜே.எம்., எண் 4ல், சுரேஷ்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணையை மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா, ஆக., 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.