Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/எட்டயபுரத்தில் அதிமுக.,பட்ஜெட் விளக்க கூட்டம்

எட்டயபுரத்தில் அதிமுக.,பட்ஜெட் விளக்க கூட்டம்

எட்டயபுரத்தில் அதிமுக.,பட்ஜெட் விளக்க கூட்டம்

எட்டயபுரத்தில் அதிமுக.,பட்ஜெட் விளக்க கூட்டம்

ADDED : ஆக 21, 2011 01:47 AM


Google News
எட்டயபுரம் : தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் உத்தரவு கேட்டு எட்டயபுரத்திற்கு அரசு இன்ஜினியரிங் கல்லூரி உருவாக்கித் தருவோம் என விளாத்திகுளம் எம்எல்ஏ.,மார்க்கண்டேயன் எட்டயபுரத்தில் நடந்த அதிமுக.,பட்ஜெட் விளக்க பொது கூட்டத்தில் பேசினார்.

எட்டயபுரத்தில் நடந்த அதிமுக.,பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து விளாத்திகுளம் எம்எல்ஏ.,மார்க்கண்டேயன் பேசியதாவது, ஏழைய எளிய மாணவர்கள் அரசு விடுதிகளில் சேர்ந்து படிக்க விரும்புபவர்களுக்கு விடுதியில் இடம் இல்லை என்ற நிலை வருங்காலத்தில் இருக்காது. தகுதியான அனைவருக்கும் விடுதியில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாருடைய சிபாரிசும் இனி தேவையில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டு எட்டயபுரத்திற்கு அரசு இன்ஜினியரிங் கல்லூரி உருவாக்க பாடுபடுவேன். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கறவை மாடுகளும், ஆடுகளும் தகுதியானர்களுக்கு வழங்கப்படும். ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி வழங்கப்படும்.

சீவலப்பேரி குடிநீர் சீராக வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு பேசினார். அதிமுக.,மாவட்ட மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் சந்திரன், நகர செயலாளர் ஆழ்வார் உதயகுமார், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், ஞானகுருசாமி ரூபம் வேலவன், தர்மராஜ், பொதுக்குழு கமலநாதன், எம்.ஜி.ஆர்.மன்றம் மாவட்ட துணை தலைவர் சவுந்திரராஜன், நகர அவைத் தலைவர் கணபதி, ஒன்றிய கவுன்சிலர் சுப்புராஜ், தலைமை கழக பேச்சாளர் அன்னம்மாள், புதூர் யூனியன் சேர்மன் தனஞ்செயன், ஜெ.,பேரவை ஒன்றிய இணை செயலாளர் மாரிமுத்து பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விளாத்திகுளம் சட்டசபை தொகுதி அதிமுக.,சார்பில் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us