"கல்வி கட்டணம் மீதான புகார்கள்விரைவில் விசாரிக்கப்படும்'
"கல்வி கட்டணம் மீதான புகார்கள்விரைவில் விசாரிக்கப்படும்'
"கல்வி கட்டணம் மீதான புகார்கள்விரைவில் விசாரிக்கப்படும்'
ADDED : ஆக 19, 2011 11:09 PM
சென்னை:'ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கல்விக் கட்டண நிர்ணயக் குழு, நிலுவையில் உள்ள புகார்களை விரைந்து விசாரித்து முடிவு செய்யும்' என, சென்னை ஐகோர்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த சேஷாச்சலம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவர், உறுப்பினர் செயலர் பதவி காலியாக உள்ளது. இதனால், பெற்றோர், மாணவர்கள் தரப்பில் அளிக்கப்படும் புகார்கள் பரிசீலிக்கப்படுவதில்லை. குழுவுக்கு தலைவர், உறுப்பினர் செயலரை நியமிக்க வேண்டும். நிலுவையில் உள்ள புகார்களை, பைசல் செய்ய உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார்.
இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. இரண்டு வாரங்களில், குழுவின் தலைவர், உறுப்பினர் செயலரை அரசு நியமிக்கும் என, அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன் உறுதியளித்தார். இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலுவை, கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக, தமிழக அரசு நியமித்தது.
இவ்வழக்கு நேற்று, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகினர். குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு, உறுப்பினர் செயலராக பள்ளிக் கல்வித் துறையின் துணைச் செயலர் வேதரத்தினம், ஓய்வு பெற்ற திருச்சி மாவட்ட கல்வி அதிகாரி மனோகரனை தனி அதிகாரியாக நியமித்து பிறப்பித்த உத்தரவுகளை, கோர்ட்டில் அட்வகேட்-ஜெனரல் தாக்கல் செய்தார்.இதையடுத்து, இந்த மனுவை பைசல் செய்த, 'முதல் பெஞ்ச்' நிலுவையில் உள்ள புகார்களை, குழு விரைந்து விசாரித்து முடிவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்தது.


