ADDED : ஆக 18, 2011 12:25 AM
சாத்தூர் : தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் சடையம்பட்டி சண்முகா ஹோமில் இலவச நீர், மோர்,காபி பந்தல் திறப்பு விழா நடந்தது.
விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.கணேசன் தலைமை வகித்தார்.நகர தலைவர் ஊரிகிருஷ்ணன், சுப்புராஜ், முன்னிலை வகித்தனர். கிருஷ்ணன், வெள்ளைச்சாமி, நடராஜன், ஆறுமுகம், பி.கருப்பசாமி, சுந்தர்ராஜன், பால்நாயக்கர், மாது, தாவீது, சின்னப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சாத்தூர் நகர தலைவர் எஸ்.சி.தாமோதரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


