Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பைக் மோதி ஒருவர் பலி

பைக் மோதி ஒருவர் பலி

பைக் மோதி ஒருவர் பலி

பைக் மோதி ஒருவர் பலி

ADDED : ஆக 17, 2011 03:52 AM


Google News

கடலூர் : மோட்டார் பைக் மோதியதில் சைக்கிளில் சென்ற ஒருவர் இறந்தார்.திட்டக்குடி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷணன், 48.

தனது நண்பர் பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையத்தைச் சேர்ந்த வீராசாமியுடன், 47, வேப்பூர் - பூலாம்பாடி சாலையில் சைக்கிளில் சென்றார். சைக்கிளை ராதாகிருஷ்ணன் ஓட்டினார்.

அங்குள்ள தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் வளைவில் திரும்பும் போது, எதிரில் வந்த மோட்டார் பைக் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராதாகிருஷ்ணன் இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us