Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விவசாயம் சார்ந்த துறைகளுக்கு முக்கியத்துவம் திட்டக்குழு செயலர் தனவேல் வலியுறுத்தல்

விவசாயம் சார்ந்த துறைகளுக்கு முக்கியத்துவம் திட்டக்குழு செயலர் தனவேல் வலியுறுத்தல்

விவசாயம் சார்ந்த துறைகளுக்கு முக்கியத்துவம் திட்டக்குழு செயலர் தனவேல் வலியுறுத்தல்

விவசாயம் சார்ந்த துறைகளுக்கு முக்கியத்துவம் திட்டக்குழு செயலர் தனவேல் வலியுறுத்தல்

ADDED : ஆக 17, 2011 03:48 AM


Google News

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு விவசாயம் சார்ந்த துறைகளுக்கு முன்னுரிமை அளித்து திட்டம் தயாரிக்க வேண்டும் என மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் 12வது ஐந்தாண்டு திட்டம் தயாரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் தனவேல் தலைமை தாங்கினார். கலெக்டர் அமுதவல்லி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சீனுவாசன், உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் தனவேல் வரும் 2012-2017 ஆம் ஆண்டு வரை 12 வது ஐந்தாண்டு திட்டம் தயாரிப்பது குறித்து மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 65 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். 40.9 சதவீதம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே வரும் ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்மைத் துறை,தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புதுறை ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டம் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us