/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வறுமை ஒழிப்பு திட்ட பயனாளிகள் தேர்வுவறுமை ஒழிப்பு திட்ட பயனாளிகள் தேர்வு
வறுமை ஒழிப்பு திட்ட பயனாளிகள் தேர்வு
வறுமை ஒழிப்பு திட்ட பயனாளிகள் தேர்வு
வறுமை ஒழிப்பு திட்ட பயனாளிகள் தேர்வு
ADDED : ஆக 17, 2011 03:41 AM
விழுப்புரம் : வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வழுதரெட்டியில் ஊராட்சியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.கோலியனூர் ஒன்றியம், வழுதரெட்டி ஊராட்சியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபாக் கூட்டம் நேற்று நடந்தது.
ஊராட்சித் தலைவர் ராயர் தலைமை தாங்கினார். கோலியனூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், வி.ஏ.ஓ., வேலு முன்னிலை வகித்தனர். கோலி யனூர் பி.டி.ஓ., ஜெயபால் அரசு நலத் திட்டங்கள் குறித்து பேசினார்.
இதில் வறுமை ஒழிப்பு திட்டப் பயனாளிகள் தேர்வு, சத்துணவு தொடர்பான விவாதங்கள், ரேஷன் கடைகளின் கணக்குகளை கிராம சபைகளில் தணிக்கை செய்தல், சுய உதவிக் குழுக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்
பட்டது.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பழனி, செல்வகுமார், செல்வி வீரக்கண்ணு, அஞ்சலி ராதாகிருஷ்ணன், ஜெயலட்சுமி சிவலிங்கம், மக்கள் நலப் பணியாளர் தேவன், ஊராட்சி உதவியாளர் கலியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


