/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசு டாக்டர்கள் சங்க தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்அரசு டாக்டர்கள் சங்க தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்
அரசு டாக்டர்கள் சங்க தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்
அரசு டாக்டர்கள் சங்க தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்
அரசு டாக்டர்கள் சங்க தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்
ADDED : ஆக 17, 2011 03:10 AM
சேலம் : சேலம் அரசு டாக்டர்கள் சங்கத்தின், புதிய நிர்வாகிகளுக்கான
தேர்தல், ஆகஸ்ட் 29ல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்
நேற்று துவங்கியது. நிர்வாக பதவிகளை பெறுவதில் டாக்டர்கள் மத்தியில் பலத்த
போட்டி நிலவுகிறது.
சேலம் அரசு டாக்டர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல்
நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்கள் மட்டுமே,
மாநில நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டு போட முடியும், என்பதால் நிர்வாக
பதவிகளை பெறுவதில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போது தலைவராக உள்ள
டாக்டர் சிவக்குமார், பணியில் இருந்து ஓய்வு பெற இன்னும் குறைந்த நாட்களே
இருப்பதால், அவர் போட்டியில் இருந்து விலகி விட்டார். இதனை அடுத்து
செயலாளர் டாக்டர் தங்கராஜ் தலைமையில் ஓர் அணியும், அறுவை சிகிச்சை துறை
டாக்டர் தனபால் தலைமையில் மற்றொரு அணியும் நிர்வாக பதவிகளை பெறுவதில் களம்
இறங்குகின்றன.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று துவங்கியது. தேர்தல்
நடத்தும் பொறுப்பாளர்களாக அறுவை சிகிச்சை துறை டாக்டர் கட்டபொம்மன், மயக்க
வியல் துறை டாக்டர் நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வில்லை. நாளை
(ஆக.,18) வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஆகஸ்ட் 19ல் வேட்பு
மனு மீதான பரிசீலனை நடக்கிறது. அன்றைய தினமே வேட்பு மனு வாபஸ்
பெறப்படுகிறது. ஆகஸ்ட் 20ல் போட்டியிடுவோரின் பட்டியல் வெளியாகிறது.
ஆகஸ்ட் 29 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டு பதிவு நடத்தப்பட்டு,
அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மாநில நிர்வாகிகளை தேர்வு
செய்வதில் சேலம் அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் முக்கிய பங்கு வகிக்க
உள்ளதால், இந்த தேர்தல் பலத்த போட்டியை ஏற்படுத்தி உள்ளது.


