Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஒரு கோடி நகை திருட்டு: துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்

ஒரு கோடி நகை திருட்டு: துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்

ஒரு கோடி நகை திருட்டு: துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்

ஒரு கோடி நகை திருட்டு: துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்

ADDED : ஆக 11, 2011 01:01 AM


Google News

சாயல்குடி : சாயல்குடியில் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டு ஐந்து மாதங்களாகியும் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

திருடியவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சாயல்குடி ஏ. பி. கே., மெயின் ரோட்டில் ஜானகி ஜூவல்லர்ஸ் கடையில் கடந்த பிப்ரவரியில் ஒரு கோடி மதிப்புள்ள (4.30 கிலோ) தங்க நகையும், ரொக்கப் பணம் 1. 2 லட்சத்தை மர்ம கும்பல் திருடிச் சென்றது. இவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இருப்பினும் ஐந்து மாதங்களாகியும் இதுவரை எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''பல தகவல்களை வைத்து விசாரித்து வருகிறோம். ஆனால் திருடியவர்கள் புதியவர்கள் என்பதால் அவர்களை பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்,'' என்றனர். திருடர்களையும், திருடப்பட்ட நகைகளையும் மீட்க புதிய எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us