Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

ராமநாதபுரத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

ராமநாதபுரத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

ராமநாதபுரத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

ADDED : ஆக 11, 2011 01:01 AM


Google News

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

ராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரோடு அகலமாக அமைக்கப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிக்க துவங்கியதால் தற்போது ரோடு குறுகிவிட்டது. கேட்பாறின்றி திரியும் மாடுகளால் பாதசாரிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். காலை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பலர் விபத்திற்குள்ளாகும் அபாயமும் உள்ளது. 'சென்டர் கிளாக்' பகுதியிலிருந்து ஒரு வழிபாதையையும் சரியாக பின்பற்றாததால் வாகனங்கள் எதிர்எதிரே வந்து செயற்கையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். நகராட்சி நிர்வாகம் அரண்மனை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், பிளாட்பார கடைகளை சிவன்கோயில் தெருவிற்கு மாற்றம் செய்தால் ஒரளவு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். ரோட்டில் சுற்றிதிரியும் கால்நடைகளை பவுண்டுகளில் அடைத்து உரிமையாளர்களிடம் அபராதம் விதித்தால் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணமுடியும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us