Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை

பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை

பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை

பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை

ADDED : ஆக 09, 2011 02:17 AM


Google News

அம்பத்தூர் : அம்பத்தூரில் பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.அம்பத்தூர் அடுத்து, சூரப்பட்டு கிழக்கு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வேலு, 45; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

பிரபல ரவுடியான, இவர் மீது, போலீஸ் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளன.ஆவடியில் புதிதாக கட்டிவரும் வீட்டை பார்க்க, நேற்று காலை வேலுவும் அவரது நண்பரும், இரு சக்கர வாகனத்தில் சென்றனர். கள்ளிக்குப்பம், ஐயப்பன் கோவில் அருகே சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் வாகனத்தை வழிமறித்து, வேலுவை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். ராஜேந்திரபாபு அங்கிருந்து தப்பியோடினார். இது குறித்து, அம்பத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர். பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டதால், அம்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us