Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ 3.50 கோடியில் நீர்வடிப்பகுதி

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ 3.50 கோடியில் நீர்வடிப்பகுதி

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ 3.50 கோடியில் நீர்வடிப்பகுதி

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ 3.50 கோடியில் நீர்வடிப்பகுதி

ADDED : ஆக 09, 2011 02:17 AM


Google News
பெரம்பலூர்: ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ 3.50 கோடி மதிப்பில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் செய்யப்படுத்தப்படவுள்ளதாக திட்ட அலுவலரும், வேளாண் இணை இயக்குனருமான சிவக்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண் திட்டத்தின் கீழ் 2010-11ம் ஆண்டில் அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரம், அயன்சுத்தமல்லி கிழக்கு மற்றும் மேற்கு, சாத்தமங்கலம் மற்றும் வெற்றியூர் உள்ளிட்ட நீர்வடிப்பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதில் அயன்சுத்தமல்லி நீர்வடிப்பகுதியில் எரக்குடி மற்றும் வேட்டக்குடி ஆகிய கிராமங்களும், சாத்தமங்கலம் நீர்வடிப்பகுதியில் சாத்தமங்கலம், புத்தூர் மற்றும் மேலவண்ணம், வெற்றியூர், விரகாலூர் மற்றும் திருப்பெயர் ஆகிய கிராமங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இந்த 4 நீர்வடிப் பகுதிகளிலும் 2,900 ஹெக்டேர் பரப்பளவு நிலம் சீர்திருத்தம் செய்யப்பட உள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 12 ஆயிரம் ரூபாய் என மூன்று கோடியே 48 லட்சம் ரூபாய் திட்ட நிதியாக செலவிடப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இயற்கை வள மேம்பாட்டு பணிகளாக தடுப்பு அணைகள் கட்டுவது, வரப்புகள் அமைப்பது, பண்ணைக்குட்டைகள், கசிவு நீர் குட்டைகள் மற்றும் கால்நடை குட்டைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு 50 சதவீத நிதி செலவிடப்படும்.வேளாண் சார்ந்த பணிகள் மூலம் பழ மரக்கன்றுகள், வேளாண் காடுகள் வளர்த்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. வேளாண்மை செயல் விளக்கங்கள் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக திட்ட நிதியில் 13 சதவீத நிதி செலவிடப்படும்.

வாழ்வாதார மேம்பாட்டுக்காக தனிநபர் மற்றும் சுயஉதவி குழுவினருக்கு மானிய உதவியுடன், சிறுதொழில் துவங்க ஏற்பாடு செய்து தரப்படும். இதற்காக 10 சதவீத நிதி செலவிடப்படும். இந்த திட்டத்தின் கீழ், 4 நீர்வடிப் பகுதிகளிலும் மக்களிடையே விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us