/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இருந்தும் இல்லாத நிலையில் சிவகாசி தீக்காய சிறப்பு பிரிவுஇருந்தும் இல்லாத நிலையில் சிவகாசி தீக்காய சிறப்பு பிரிவு
இருந்தும் இல்லாத நிலையில் சிவகாசி தீக்காய சிறப்பு பிரிவு
இருந்தும் இல்லாத நிலையில் சிவகாசி தீக்காய சிறப்பு பிரிவு
இருந்தும் இல்லாத நிலையில் சிவகாசி தீக்காய சிறப்பு பிரிவு
சிவகாசி : சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தீக்காய சிறப்பு பிரிவு ,இருந்தும் இல்லாத நிலையில், முதலுதவி சிகிச்சை மையமாக மாறுவதால் பலரும் பாதிக்கும் நிலை தொடர்கிறது.
டாக்டர்களும் தீ காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, எத்தனை சதவீதம் தீக்காயம் என்பதையும் தீர்மானிக்கின்றனர். பாதிக்கப்பட்டவரை காப்பாற முடியுமா, முடியாதா என்பதும் அப்போதே டாக்டர்களுக்கு தெரிந்து விடும். ஆனால் டாக்டர்களோ, நோயாளிகளின் மோசமான நிலையை அறிந்தும், முதலுதவி மட்டும் செய்தப்படி மதுரை அரசு, தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்புகின்றனர். மதுரைக்கு சிகிச்சை செல்வோரும் ஒரிரு நாளில் இருக்கின்றனர். இது போன்ற இறந்தவர்களின் உடலை மதுரையில் பிரேத பரிசோதனை நடத்தி, அடக்கம் செய்வதற்குள் குடும்பத்தினர், உறவினர்கள் படாதபாடு படுகின்றனர். கிராமத்தில் உள்ள உறவினர்கள் மதுரை சென்று இறந்தவரின் முகத்தை கூட பார்க்க முடியாமல் நிலை நேரிடுகிறது.
கடந்த ஐந்தாம் தேதி நடந்த பட்டாசு வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட 7 பேரும் 70 சதவீத தீக்காய பாதிப்பிற்கு உள்ளானர்கள். இவர்களின் நிலை தெரிந்தும் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். அனுப்பிய சில மணிநேரத்திலே இருவர், மறுநாள் காலையில் ஒருவர், நேற்று இருவர் இறந்தனர். விபத்து காலங்களில் சிவகாசி ஆஸ்பத்திரியில் கூடும் கூட்டத்தால், சட்டம் -ஒழுங்கு பிரச்னை எழும் என்பதை போலீசாரும், வருவாய்துறையினரும் மனதில் கொண்டு, இதன் தற்காலிக தீர்வாக நோயாளிகளை மதுரைக்கு அனுப்புவதிலே குறியாக இருக்கின்றனர். இதன் காரணமாக, சிவகாசியில் நவீன வசதியுடன் கூடிய தீக்காய சிகிச்சை பிரிவு இருந்தும்,இல்லாத நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மதுரை ஆஸ்பத்திரிகளில் அளிக்கும் நவீன சிகிச்சை, சிவகாசி ஆஸ்பத்திரியில் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


