ADDED : ஆக 06, 2011 02:17 AM
திட்டக்குடி : வதிஸ்டபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் ”மந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.திட்டக்குடி அடுத்த வதிஸ்டபுரம் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தது. நேற்று (5ம் தேதி) பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.