ADDED : ஆக 06, 2011 02:09 AM
கடலூர் : மாவட்டத்தில் 88 போலீசாரை மாற்றம் செய்து எஸ்.பி., பகலவன் உத்தரவிட்டுள்ளார்.மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் மற்றும் விருத்தாசலத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு செயல்பட்டு வருகிறது.
இங்கு பணியாற்றி வரும் 44 போலீசார்களுக்கு ஓராண்டு பணி முடிந்ததையொட்டி அவர்களை போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், அவர்களுக்கு பதிலாக ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் 44 ஏட்டு மற்றும் போலீசாரை மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளுக்கு மாறறம் செய்து எஸ்.பி., பகலவன் உத்தரவிட்டுள்ளார்.