/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்திட்டங்கள்தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்திட்டங்கள்
தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்திட்டங்கள்
தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்திட்டங்கள்
தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்திட்டங்கள்
ADDED : ஆக 03, 2011 10:36 PM
உடுமலை : 'தோட்டக்கலைத்துறை சார்பில் நடப்பாண்டில் பல்வேறு மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக' உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
உடுமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேந்திரன் அறிக்கை:மாநில அரசு தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உடுமலை வட்டாரத்திற்கு நடப்பாண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் மா, கோகோ, திசு வாழை, உதிரி மலர்கள் மற்றும் மிளகாய் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் மற்றும் மருந்துகள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு 26 எக்டருக்கு மா ஒட்டு செடிகள், உரம் மற்றும் மருந்துகளும், தென்னையில் ஊடுபயிராக கோகோ பயிரிடுபவர்களுக்கு 50 எக்டருக்கு கோகோ நாற்றுகள், உரங்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறது. திசு வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு 30 எக்டருக்கு திசு வாழைக்கன்றுகள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும். வாழை சாகுபடிக்கு 50 எக்டர், உதிரி மலர் சாகுபடிக்கு 14 எக்டர் மற்றும் மிளகாய் சாகுபடிக்கு 5 எக்டர் என்ற அடிப்படையில் 75 சதவீத மானியத்தில் உரம் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற, இன்றைய தேதியில் மானிய விண்ணப்பம், கணினிசிட்டா, அடங்கல் உரிமை சான்று, குடும்ப அட்டை நகல் மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் இயங்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.