சிறுவன் தில்ஷனை சுட்ட "மாஜி' ராணுவ வீரரின் ஜாமின் மனு: இன்று விசாரணை
சிறுவன் தில்ஷனை சுட்ட "மாஜி' ராணுவ வீரரின் ஜாமின் மனு: இன்று விசாரணை
சிறுவன் தில்ஷனை சுட்ட "மாஜி' ராணுவ வீரரின் ஜாமின் மனு: இன்று விசாரணை
ADDED : ஆக 01, 2011 10:50 PM
சென்னை: துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் இறந்த வழக்கில், ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் ஜாமின் மனு மீது, இன்று சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது.
சென்னை தீவுத்திடல் அருகே உள்ள, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார்.
இவரது மகன் தில்ஷன். அருகில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில், பாதாம் கொட்டை பறிக்கச் சென்ற போது, சிறுவன் தில்ஷன் மீது துப்பாக்கியால் சுட்டதில் அவன் இறந்தான். இந்தச் சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராமராஜ் என்பவரை, போலீசார் கைது செய்தனர். ஜாமின் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், ராமராஜ் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி தேவதாஸ் விசாரித்தார். ராமராஜ் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், 'இவ்வழக்கில் நேரடி சாட்சி இல்லை. அவசரகதியில் ராமராஜை கைது செய்துள்ளனர். அவர் குற்றம் புரியவில்லை. துப்பாக்கி குண்டு தொடர்பாக, பதில் மனுவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை' என வாதாடினார். போலீஸ் தரப்பில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், 'சிறுவர்கள் தொந்தரவு செய்கின்றனர்' என துப்பாக்கியால் சுட்டுள்ளார். காரில் வெளியே போகும் போது, வாட்ச்மேன் பார்த்துள்ளார். இவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது' என வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேவதாஸ், ஜாமின் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிப்பதாக கூறினார்.