/உள்ளூர் செய்திகள்/சேலம்/பொது இடங்களில் போலீஸ் குவிப்பு நள்ளிரவு வரை தேடுதல் வேட்டைபொது இடங்களில் போலீஸ் குவிப்பு நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை
பொது இடங்களில் போலீஸ் குவிப்பு நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை
பொது இடங்களில் போலீஸ் குவிப்பு நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை
பொது இடங்களில் போலீஸ் குவிப்பு நள்ளிரவு வரை தேடுதல் வேட்டை
ADDED : ஆக 01, 2011 03:58 AM
சேலம்: தி.மு.க., சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, சேலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மாஜி அமைச்சர் கைது செய்யப்பட்ட நிலையில், சேலம் மாவட்டத்தில் நேற்று காலை வரை, 29 அரசு பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், மாஜியின் ஆதரவாளர்கள் கடைகளை அடைக்குமாறு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, சேலத்தில் போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.கோவை மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் தலைமையில் சேலம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம், எஸ்.பி., மயில்வாகணன், நாமக்கல் எஸ்.பி., பிரவேஸ்குமார், தர்மபுரி எஸ்.பி., கணேசமூர்த்தி ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தி, ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், ஜங்ஷன், அண்ணாதுரை சிலை, எம்.ஜி.ஆர்.,சிலை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வாகன ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சிறப்பு காவல் படையை சேர்ந்த எட்டு கம்பெனி போலீஸார், 200 பேர் சேலம் வந்துள்ளனர். இவர்களை தவிர, சேலம் புறநகர் பகுதியில் உள்ள போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.தி.மு.க.,வினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு, போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்பட வில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க., பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்துவதால், அவர்கள் தலைமறைவாகி உள்ளனர். நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார், இன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களையும் கைது செய்யத்திட்டமிட்டுள்ளனர்.