/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானி - குமாரபாளையம் பாலத்தில் பள்ளங்களால் அவதிபவானி - குமாரபாளையம் பாலத்தில் பள்ளங்களால் அவதி
பவானி - குமாரபாளையம் பாலத்தில் பள்ளங்களால் அவதி
பவானி - குமாரபாளையம் பாலத்தில் பள்ளங்களால் அவதி
பவானி - குமாரபாளையம் பாலத்தில் பள்ளங்களால் அவதி
ADDED : ஜூலை 21, 2011 02:27 AM
பவானி:பவானி - குமாரபாளையம் பாலம் தொடர்ந்து பழுதடைந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி - நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆகிய நகராட்சிகளை இணைக்கும் வகையில், காவிரியாற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. நெடுஞ்சாலைத் துறை மூலம், 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப்பாலம் 2005 மே 27ம் தேதி திறக்கப்பட்டது. பவானி, குமாரபாளையம் ஆகிய இரு நகராட்சிகளுமே தொழில் நகரங்களாக விளங்குகின்றன. பவானியில் ஜமுக்காளம் தொழிலும், குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலும் புகழ்பெற்றுள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகள், தறிப்பட்டறைகள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். இதனால், இந்தப் பாலத்தில் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். பாலம் திறந்து ஆறு ஆண்டுகளான நிலையில், எவ்விதமான பராமரிப்பு பணியும் நடக்கவில்லை. பாலத்தின் பல இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. பாலத்தின் இரு முனைகளிலும், அணு சாலையும், பாலமும் சேரும் இடத்தில் தார் முழுவதும் பெயர்ந்து, மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, அதை மண் கொண்டு நிரப்பியுள்ளனர். சிறு மழை பெய்தாலும் மண் அரிக்கப்பட்டு, மீண்டும் பள்ளம் ஏற்பட்டுவிடுகிறது. பாலத்தின் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என, பவானி, குமாரபாளையம் மக்கள் கோருகின்றனர்.


